சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பரவி வந்தாலும், சில வீடியோக்கள் மட்டுமே பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைக்கும் வகையில் அமைந்திருக்கும். அந்த வகையில், சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பரவி வரும் ஒரு வீடியோ காண்போரைக் உரைய வைத்துள்ளது.
அதில், ஒரு சிறுவன் சிறிதும் பயமின்றி ஆபத்தான ஒரு உயிரினத்துடன் விளையாடிக் கொண்டிருக்கிறான். சிறுவயதில் ஆபத்து எதுவென்று அறியாத அந்தப் பிஞ்சு குழந்தை, கொடிய நஞ்சுள்ள ஒரு பாம்பை சாதாரணமாகத் தன் கைகளில் பிடித்துக் கொண்டு அதனுடன் விளையாடும் காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
இந்த வீடியோவின் உச்சக்கட்ட அதிர்ச்சியாக, அந்தச் சிறுவன் கையில் இருக்கும் பாம்பின் முகத்திற்கு அருகே தன் முகத்தைக் கொண்டு சென்று அதற்கு முத்தமிடுகிறான். விஷப்பாம்புகள் சிறு தூண்டதலுக்கே சட்டென்று சீறிப்பாய்ந்து கடிக்கக்கூடிய தன்மையுடையவை என்பதை அறியாத அந்தச் குழந்தை, தன் உயிரைப் பணயம் வைத்து இந்த ஆபத்தான செயலில் ஈடுபடுகிறான்.
பாம்பும் குழந்தையைக் கண்டு சற்றே அமைதியாக இருப்பது போல தோன்றினாலும், எந்தக் கணத்திலும் அது குழந்தையைக் தாக்கியிருக்கக்கூடும் என்பதே இந்த வீடியோவைச் சுற்றிலும் உள்ள மிகப்பெரிய பயமாக இருக்கிறது. இணையத்தில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அதைப் பார்த்த பயனர்கள் பலரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.
“குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்கள் இவ்வளவு அலட்சியமாக இருக்கக்கூடாது” என்றும், “பாம்பு போன்ற கொடிய விலங்குகளின் அருகில் குழந்தைகளை அனுமதிப்பது மிகப்பெரிய ஆபத்து” என்றும் நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களையும் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர். கவனக்குறைவால் ஏற்படும் சிறு தவறும் ஒரு பிஞ்சு உயிரின் வாழ்க்கையையே பறித்துவிடும் என்பதை உணர்த்தும் எச்சரிக்கையாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
सांप से हमेशा सावधान रहना चाहिए।
इस वीडियो में देखिए कैसे यह बच्चा सांप को हाथ में पकड़ के चुम्मन कर रहा है।
इसको यह नहीं पता कि सांप के ऐसा करने से इसके साथ क्या हो सकता है ।
लेकिन यह तो बच्चा है इसको नहीं पता लेकिन जो वीडियो बना रहा है उसको तो यह पता होगा कि एक गलती से… pic.twitter.com/4FkyceJbwb
— Ankit Yadav (@Ankit_Talkss) July 23, 2026
“>
