அனந்த் மதுகர் சவுத்ரி தெற்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனராக நேற்று பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ஆனந்த் மதுகர் தென்மேற்கு ரயில்வே பெங்களூரு, கொச்சி, சென்னை ஆகிய மெட்ரோ ரயில் பாதுகாப்பு கமிஷனராகவும் வேலை செய்வார். கடந்த 1987-ஆம் ஆண்டு அனந்த் இந்திய ரயில்வேயில் சர்வீஸ் ஆப் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் பிரிவில் பணிக்கு சேர்ந்தார்.
இவர் மின்மயமாக்கல், மின்சார எஞ்சின்கள், பொது நிர்வாக துறையில் பல்வேறு பதவிகளில் வேலை பார்த்தார். இதற்கு முன்பாக தென்கிழக்கு ரயில்வேயில் அனந்த் ரயில்வே பாதுகாப்பு கமிஷனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். பொறுப்பேற்று கொண்ட புதிய கமிஷனரை அதிகாரிகள் வாழ்த்தியுள்ளனர்.