ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் அண்மையில் தன் புது ஆக்டிவா ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு ஹோண்டா ஆக்டிவா எச்-ஸ்மார்ட் என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் ஸ்பெஷல் என்னவெனில், கார் போன்ற ஸ்மார்ட் கீ கொடுக்கப்பட்டு உள்ளது. இச்சாவியின் மூலம் ஸ்கூட்டரை லாக் மற்றும் அன்லாக் செய்யலாம். மேலும் சாவி இல்லாமலேயே ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யலாம். சாவி 2 மீட்டர் வரம்புக்கு வெளியே இருந்தால், ஸ்கூட்டர் தானாகவே பூட்டப்படும். எனவே இந்த ஸ்கூட்டர் திருடப்பட வாய்ப்பில்லை. இதன் ஆன்ரோடு(டெல்லி) விலை கீழ்கண்டவாறு இருக்கிறது.

# ஸ்டாண்டர்ட் வேரியன்ட் ரூபாய்.85,298

# டீலக்ஸ் ரூபாய்.88,027

# எச்-ஸ்மார்ட் வேரியன்ட் ரூபாய்.93,238.

இவற்றில் நாம் முன்பணம் ரூ.9,000, கடன் காலம் 3 வருடங்கள் மற்றும் 10% வட்டி விகிதம் என வைத்து உள்ளோம். இதனிடையில்  கடன் காலம் மற்றும் முன்பணம் செலுத்தும் தொகையை நீங்களே தேர்வு செய்யலாம். அதோடு வட்டி விகிதமும் வங்கிக்கு வங்கி மாறுபடும்.