Whatsapp தன் பயனர்களின் வசதிக்காக பல புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது ஒரு புது அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தவுள்ளது. படங்களை பகிர்வதற்கு ஏராளமானோர் வாட்ஸ்அப் தான் பயன்படுத்துகின்றனர். எனினும் சாதாரணமாக படங்களை அனுப்பும்போது படங்கள் தானாக தரம் குறைக்கப்பட்டு குறைந்த பிக்சல் அளவோடு சென்றடையும்.

இதன் காரணமாக வாட்ஸ்அப் நிறுவனமானது புது அம்சத்தை சோதனை செய்து வருகிறது. அதாவது, படங்களை அனுப்பும்போது எந்த தரத்தில் அனுப்ப வேண்டும் என்பதை பயனர்களே தேர்வுசெய்து அனுப்பலாம். வாட்ஸ்அப் பீட்டா பதிப்பு 2.21.15.7ல் 3 புகைப்பட தர விருப்பங்களை சோதனை செய்து வருகிறது.

அதாவது ஆட்டோமேட்டிக், சிறந்த தரம் மற்றும் டேட்டா சேவர் தரம் என்ற 3 விருப்பங்கள் கேட்கும். இதில் சிறந்த தரம் எனும் விருப்பத்தை தேர்வு செய்தால் புகைப்படம் ஏறத்தாழ அசல் தரத்தில் அனுப்பப்படும். இந்த அம்சத்தை இப்போது பீட்டா பயனர்களுக்கு வழங்கி சோதனை செய்து வருகிறது. இன்னும் சில நாட்களில் இது அனைவருக்கும் கொண்டுவரப்படும் என நிறுவனம் தெரிவித்து உள்ளது