இன்றைய காலகட்டத்தில் நெட்வொர்க் இல்லாத இடத்தையும் நபர்களையும் பார்க்க முடியாது. இவ்வாறு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வளர்ச்சி கண்டு வருகின்றன. அதாவது வாடிக்கையாளர்களின் மனநிலை மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு தொலை தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் பலவிதமான சலுகைகளை வழங்கிய மாதாந்திர ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவின் முன்னணியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் பயனர்களுக்கு 2 புதிய ப்ரீபெய்டு திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி 489 ரூபாய் விலையில் 30 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் அழைப்புகள், 50 ஜிபி டேட்டா, 300 SMS மற்றும் 509 ரூபாய் விலையில் ஒரு மாதம் வேலிடிட்டி, அன்லிமிடெட் அழைப்புகள், 60 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதனுடன் அப்போலோ சந்தா பாஸ்டேகிற்கு 100 ரூபாய் கேஷ்பேக், இலவச வின்க் மியூசிக் சேவை வழங்கப்படுகின்றது.