கர்நாடக மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் மக்களவைத் தொகுதியின் பாஜக எம்.பி ஸ்ரீனிவாஸ் பிரசாத் (70). இவர் உடல்நல குறைவின் காரணமாக நேற்று காலமானார். இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்வர் உட்பட கட்சியினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அவருடைய உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என முதல்வர் அறிவித்ததுள்ளார். மேலும் இன்று ஒரு நாள் மட்டும் மைசூர் மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் விடுமுறை வழங்கப்படும் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது.