உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தையடுத்து, பிரபல யோகா மாஸ்டரான பாபா ராம்தேவின், பதஞ்சலி நிறுவனம் உற்பத்தி செய்யும் 14 மருந்துகளுக்கு உத்தராகண்ட் மாநில அரசு தடை விதித்துள்ளது. பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சில் தாக்கல் செய்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொய்யான விளம்பரங்களின் மீது மத்திய அரசும், உத்தராகண்ட் அரசும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. இதனிடையே 14 மருந்துகளுக்கு தடை விதித்தும், மருந்துகள் தயாரிப்பதற்கான திவ்யா பார்மசி மற்றும் பதஞ்சலி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.