கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி மஜத வேட்பாளர் பிரஜ்வால் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில், அவரது பிரச்சனைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கர்நாடகா முன்னாள் முதல்வரும், பிரஜ்வாலின் சித்தப்பாவுமான குமாரசாமி கை விரித்துள்ளார். தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணாவின் மகனான பிரஜ்வால் மீது பல பெண்களை வற்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்தது, பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டது என பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் குமாரசாமி இவ்வாறு பதிலளித்துள்ளார்.