சீன தொழில் நுட்ப நிறுவனமான Xiaomi பட்ஜெட் விலை மொபைலான Redmi A1-க்கு மிகப் பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த மொபைலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்ந்த இயர்போன்களும் இலவசமாக வழங்கப்படும். ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் நிறுவனம் தான் இந்த மிகப் பெரிய தள்ளுபடியை கொடுக்கிறது.

வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால் EMI ஆப்சனும் உள்ளது. அதுவும் நோ காஸ்ட் EMIல் வாங்கி கொள்ளலாம். இந்திய சந்தையில் 2GP ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பகத்துடன் கூடிய Redmi A1-ன் அடிப்படை மாறுபாட்டின் விலை ரூபாய்.8,999 ஆகும். இந்த போன் அமேசானில் 37சதவீத தள்ளுபடிக்கு பின் ரூபாய்.5,699-க்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.

அதோடு எச்எஸ்பிசி வங்கி கிரெடிட் கார்டு வாயிலாக பணம் செலுத்தினால் ரூபாய்.250 வரை கூடுதல் தள்ளுபடியும் கிடைக்கும். பழைய போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்பவர்கள் ரூபாய்.5,400 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகையின் பலனை பெறலாம். மேலும் ரூபாய்.699 மதிப்புள்ள வயர்டு இயர்போன்களும் இந்த போனுடன் இலவசமாக கிடைக்கும்.