நீங்கள் ஒரு ப்ரீபெய்ட் வாடிக்கையாளராக இருப்பின், jio நிறுவனம் 2 புது திட்டங்களை சேர்த்துள்ளது. jio-ன் இந்த புது ரீச்சார்ஜ் பிளான் மார்க்கெட்டில் புயலை ஏற்படுத்தப் போகும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதன் அம்சம் என்னவெனில் பிளான்களின் விலை குறைவு மற்றும் வேலிடிட்டி அதிகம் ஆகும்.

jio ரூ. 899 திட்டம்

இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 90 நாட்கள். வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தில் மொத்தம் 225gp டேட்டாவைப் பெறுவர். தினசரி அடிப்படையில் 2.5gp டேட்டா பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் வரம்பற்ற குரலழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் தினசரி வழங்கப்படுகிறது. கூடுதலாக jio டிவி, jio சினிமா, jio செக்யூரிட்டி மற்றும் jio கிளவுட் போன்றவற்றின் சேவையையும் இலவசமாக பெறுவீர்கள்.

ஜியோ ரூ.334 திட்டம்

இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 30 நாட்கள் வேலிடிட்டி பெறுகின்றனர். மாதம் முழுவதும் இயங்கும் இத்திட்டத்தில் வாடிக்கையாளர்கள் 75gp டேட்டாவைப் பெறுகின்றனர். தினசரி  வாடிக்கையாளர்களுக்கு 2.5gp டேட்டா கிடைக்கும். அதோடு வரம்பற்ற இலவச குரல் அழைப்பு, தினசரி 100 sms பயன்படுத்தலாம். அதோடு ஜியோவின் இலவச சேவையையும் நிறுவனம் உங்களுக்கு வழங்குகிறது. இச்சேவையில், jio டிவி, jio சினிமா, jio செக்யூரிட்டி மற்றும் jio கிளவுட் சேவையை இலவசமாக பெறுவீர்கள்.