உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவித அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் வாட்ஸ் அப் பயன்படுத்துவதின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மாசான அப்டேட் ஒன்றை வழங்கியுள்ளது.

அதாவது வாட்ஸ் அப் குரூப்பின் subject- இல் இடம்பெறும் எழுத்துக்களின் எண்ணிக்கையை 25 இலிருந்து 100 ஆகவும், description எழுத்துக்களை 512 இலிருந்து 2,048 ஆகவும் அதிகரித்து புதிய அட்டகாசமான அப்டேட்டை வழங்கியுள்ளது. இது பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என தெரிவித்துள்ளது.