சுப்தீப் சிங் சித்து தொழில் ரீதியாக சித்து மூஸ் வாலா என்று அழைக்கப்படுகிறார். இவர் பஞ்சாபில் பிரபல ராப் பாடகர் ஆவார். கடந்த 2021ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதற்கு அடுத்த 2022 ஆம் ஆண்டு சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்றார். சித்து முஸ்வாலாவின் இறப்பு அவரது பெற்றோர்களை மிகவும் பாதித்துள்ளது.

இதனால் சித்து முஸ்வாலாவின் தாயார் மற்றும் தந்தை இருவரும் செயற்கை கருத்தரித்தல் மூலமாக மார்ச் 2024இல் ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர்.சித்து முஸ்வாலாவின் சகோதரனான அந்த குழந்தைக்கு அவரது பெயரையே வைத்துள்ளனர். தங்களது மகன் மீண்டும் பிறந்ததாக பெற்றோர் இருவரும் சமூக வலைதளங்களில் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து தங்களது நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.