மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த பிரச்சாரத்தில் அவர் கூறியதாவது, காங்கிரஸ் சதி திட்டத்தை மகாராஷ்டிரா மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாடு அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டத்தை மட்டுமே பின்பற்றும் சட்டம் 370 எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளாது.
இதனை காங்கிரஸ் முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும். எந்த கட்சியினராலும் நான் ஆட்சி செய்யும் வரையிலும் மீண்டும் சட்டம் 370 கொண்டு வர முடியாது. காங்கிரஸ் கட்சியினர் பாகிஸ்தானுக்கான சட்டத்தினை முன் வைப்பது தவறாகும். காஷ்மீர்க்காக எந்தவித பிரிவினைவாத மொழிகளையும் பேசுவதை நிறுத்த வேண்டும் என காட்டமாக கூறினார்.