கர்நாடக மாநிலத்தில் உள்ள சென்னப்பட்டினா தொகுதியில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல் நவம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெறும். இந்தத் தேர்தலில் தேவ கவுடா தனது பேரனாகிய நிகில் குமாரசாமியை வேட்பாளராக போட்டியிட வைத்துள்ளார். இந்த நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரக் கூட்டத்தில் அவர் கூறியதாவது, எனக்கு வயது 92 ஆகிறது இதுவரை நான் அரசியலுக்காக பல முயற்சிகளை செய்துள்ளேன். கடைசி என் மூச்சிருக்கும் வரை நான் அரசியலுக்காகவே உழைப்பேன்.

எனது 18 வயது முதல் 92 வயது வரை அரசியல் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைந்ததற்கு எனது தொண்டர்களே காரணம் என தெரிவித்தார். மேகதாது திட்டத்தை நமது விவசாயிகளுக்காக நிச்சயமாக கொண்டு வருவதற்காக போராடுவேன் எனவும் மேகதாது அணை கட்டுவதே எனது அரசியல் வாழ்க்கையின் முக்கிய லட்சியம் எனவும் கூறினார். மேலும் மத்திய அரசு மோடி தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமான ஆட்சி நடத்தி வருகிறது எனவும் தெரிவித்திருந்தார்.