உலகத் தமிழர்கள் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிரபாகரன் நலமுடன் இருக்கின்றார். விரைவில் வெளிப்படுவார். அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பிரபாகரன் எங்கே இருக்கிறார் ? எப்போது வருவார் ?  என்பது எங்களுக்கு மட்டுமல்ல… எனக்கும், உலகத்தில் இருக்கக்கூடிய ஒட்டுமொத்தமாக இருக்கக்கூடிய தமிழர்களுக்கும் ஆவலாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் விரைவில் அவர் வெளிப்படுவார். அதை உலகம் அறிந்து கொள்ளும்.

இந்த உண்மையை அறிந்து கொள்வதற்காக தான் சிங்கள அரசாங்கத்தின் உளவுத்துறையும், உலக நாடுகளின் உளவுத்துறைகளும் விடாமல் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.  பிரபாகரனின் மனைவி, மகள்  எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். சர்வதேச சூழல் இன்று அதற்கு சாதகமாக இருக்கிறது.  எந்த சிங்கள மக்கள் ராஜபக்சையை ஆட்சியில் பீடத்தில் உட்கார வைத்தார்களோ,  அதே சிங்கள மக்கள் அவருக்கு எதிராக கொதித்து எழுந்து போராடி அவருடைய ஆட்சியை வீழ்த்தி இருக்கிறார்கள். சிங்கள மக்கள் மனதில் இப்போது தான் உண்மை புரிய தொடங்கியிருக்கிறது. இதைவிட நல்ல சூழலில் வேறு என்ன இருக்க முடியும் ? என தெரிவித்தார்.