தபால் அலுவலக கிராம பாதுகாப்பு திட்டமானது மிகவும் பிரபலமானதாகும். இந்த திட்டத்தில் கிராமப்புற மக்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பயன் பெறுவார்கள். இதில் மிக முக்கிய விஷயம் என்னவெனில், நீங்கள் தினசரி 50 ரூபாய் மட்டுமே முதலீடு செய்யவேண்டும். அதன்பின் உங்களுக்கு இதில் சிறந்த வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் தினசரி ரூபாய்.50 அதாவது மாதம் ரூ.1500 முதலீடு செய்யவேண்டும்.

அதனை தொடர்ந்து இத்திட்டத்தில் 31 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரையிலும் வருமானம் கிடைக்கும். 80 வருடங்கள் நிறைவடைந்ததும்  முழுத்தொகையும் பெறுவார்கள். இதற்கிடையில் முதலீட்டாளர் 80 வயதில் இறந்து விட்டால் அவரது நாமினிக்கு போனஸ் உடன் முழுத்தொகையும் கிடைக்கும். 19 -55 வயது வரையுள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் கிராம பாதுகாப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். குறைந்தது ரூபாய்.1,000 -ரூ.10 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். பிரீமியம் செலுத்துவதற்கு பல்வேறு விருப்பங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு (அ) ஆண்டு அடிப்படையில் தவணை செலுத்தலாம்.