மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27 ஆம் தேதியும், திரிபுராவில் பிப்ரவரி 16 ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையும் மார்ச் 2 ஆம் தேதியே நடைபெற உள்ளது. இதனை அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்90 மணி நேரங்களில் 10 தேர்தல் பொதுக் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சுமார் 10,800 கிலோமீட்டர் தூரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணிக்கவுள்ளார். திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்களுக்கு PM மோடி தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். கடந்த 3 நாட்களில் மட்டும் அவர் 6,450 கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளார். திரிபுராவுக்கு வரும் 16ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது