தர்மபுரி மாவட்டத்திலுள்ள மாரண்டஅள்ளி இ.பி காலனி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி(27) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஜோதிக்கும் அவரது மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 1- ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜோதி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து வெங்கடேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.