புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சிலர் சட்டவிராதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கணேசன், செல்வம், கார்த்திகேயன், முருகேசன், பாஸ்கர், பழனி என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஆறு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.