புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள களமாவூர் தெற்குப்பட்டியில் சிங்கராயர்(44) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சிங்கராயரின் மகள் காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிங்கராயர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிங்கராயர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.