புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாலைவனம் ஆண்டவராயர் சமுத்திரத்தில் சிங்காரவேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆலங்குடி மணிப்பள்ளம் அருகே அருண்குமார் என்பவர் ஓட்டி வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சிங்காரவேலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிங்காரவேலுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.