தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நத்தமேடு கேட்டூர் கிராமத்தில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியசாமி என்ற மகன் உள்ளார். இவர் சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் 2- ஆம் நிலை காவலராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1- ஆம் தேதி கால் வலி காரணமாக மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்கு வந்த பெரியசாமிக்கும் அவரது அண்ணன் சக்திவேலுக்கும் இடையே நிலம் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் தனக்கு சேர வேண்டிய நிலத்தை பிரித்து தருமாறு பெரியசாமி கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சக்திவேல் பெரியசாமியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் காயமடைந்த பெரியசாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.