கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை லேட் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது குடித்துவிட்டு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தகராறு செய்துள்ளார். கடந்த 1-ஆம் தேதி வீட்டிற்கு வந்த மாணவியின் தந்தை தனது மகள் என பார்க்காமல் அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து மாணவி தனது தாயிடம் தெரிவித்தார். இது தொடர்பாக மாணவியின் தாய் தனது கணவரிடம் கேட்டபோது அவர் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியின் தந்தையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.