கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ் மணியன்குழி பகுதியில் அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 40 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.