கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் 3 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு வழக்கமாக விளையாட செல்வார். சம்பவம் நடைபெற்ற அன்று சிறுமி வழக்கம் போல விளையாட சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் இருந்த 15 வயது சிறுவன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
