செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ்,  நீங்கள் எல்லா கோவிலுக்கும் சென்று வாருங்கள்…  எல்லா மதத் தலைவர்களுக்கும்  ஒரு பிரதமர்,  நடுநிலையோடு இருக்க வேண்டும்…. ஒரு மதத்திற்காக செயல்படுவதாக,  பொய்யான வாக்குறுதியை கொடுக்கிற மோடி அவர்களுடைய ஆட்சிக்கு 60 நாள்தான் இருக்கிறது.  வீட்டுக்கு அனுப்புவதற்கு….  மோடியின் உடைய ஆட்சி ஆட்டம் அடங்குவதற்கு 60 நாள்தான் இருக்கிறது. மோடியுடைய பொய் வாக்குறுதிகள் அடங்குவதற்கு 60 நாள்தான் இருக்கிறது.

தேர்தல் முடிவு தெளிவாக இருக்கும் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல,  இந்தியா முழுவதும் எந்த கட்சித் தலைவர் வாக்களித்தும்,  எந்த கட்சியும் ஜெயிப்பது இல்லை. மக்கள் வாக்களித்து தான் வெற்றி பெறுகிறார்கள்.  அதனால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

இதோடு நம்முடைய தமிழ்நாட்டிற்கு ஜிஎஸ்டி மூலமாக நாம் செலுத்துவது மாதம் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் கோடி.  நம்முடைய தமிழ்நாட்டில் இருக்கிற தொழில் செய்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், கடை வைத்திருப்போர்கள், எல்லா தொழில் செய்பவர்களும் கட்டுகிற பணம் ஆண்டுக்கு மூன்று லட்சம் கோடி….

வருமானவரி மூலமாக நாம் செலுத்துவது ஆண்டுக்கு 90 ஆயிரம் கோடியில் இருந்து ஒரு லட்சம் கோடி வரை…. இந்த ஆண்டு ஒரு லட்சத்து 8 ஆயிரம் கோடி வருமான வரி அதிகமாக செலுத்தி இருக்கிற மாநிலம் தமிழ்நாடு… அதோட இவர்களுக்கு வரியாக செலுத்துகிற பணத்தோடு உற்பத்தி வரி, கச்சா வரி,  இந்த வரிகளை எல்லாம் சேர்த்து….

அதாவது வாகனங்கள் உற்பத்தி செய்பவர்கள் மிஷனரி உற்பத்தி செய்து வெளி மாநிலங்களுக்கு விற்றாலோ,  வெளிநாட்டிற்கு விற்றாலோ அதற்கு என்று ஒரு தனி வரி போடுகிறார்கள். அந்த கலால் வரியோடு சேர்த்து இவர்கள் வசூலிக்கிற பணம் ஆண்டுக்கு 40,000 கோடி. ஒரு வருஷத்துக்கு 6,20,000 கோடியை நாம் நிதியாக கொடுக்கிற தமிழ்நாட்டில்,  மூன்று லட்சம் கோடி ஜிஎஸ்டி வரியில் கொடுக்கிறோம் என தெரிவித்தார்.