தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்க பணம் போன்றவைகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த பொங்கல் பரிசை பெறுவதற்கான டோக்கன் ஜனவரி 12-ஆம் தேதி முதல் வழங்கப்படும். அதன் பிறகு பொங்கல் பரிசை பெற முடியாத குடும்ப அட்டைதாரர்கள் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை காமராஜர் சாலை எதிரே உள்ள அண்ணா சத்யா நகரில் தொடங்கி வைத்தார். இதே நாளில் மற்ற மாவட்டங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் பொங்கல் பரிசு தொகுப்பினை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.