தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரையில் ஆளுநர் உரையை வரவேற்கும் அதே நேரத்தில் வன்மையாக கண்டிக்கிறோம் என எதிர்க்கட்சிகள் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது. அதே போல ஆளுநர் ரவி உரையை புறக்கணித்து திமுக கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்து கண்டனம் தெரிவித்தனர்.

வெளியேறு… வெளியேறு… ஆளுநரே வெளியேறு என திமுக கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். ஆளுநர் உரையை கண்டித்து பாமகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் கோஷம். ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை உடனடியாக கையெழுத்திட வேண்டும் என பாமக உறுப்பினர்கள் கோஷம் ஆன்லைன் சட்டமன்ற கையெழுத்திட வேண்டும் என வாசகத்துடன் சட்டப்பேரவையில் பாமக வலியுறுத்தினர்.