ஜேம்ஸ் கேமரூன் டைரக்டில் அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்றிருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. அதோடு வசூலிலும் சாதனை படைத்து 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது.

13 வருடங்களுக்கு பின் அவதார் படத்தின் 2-ம் பாகம் “அவதார் தி வே ஆப் வாட்டர்” எனும் பெயரில் தயாராகி ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உட்பட உலகம் முழுவதும் 160 மொழிகளில் கடந்த டிசம்பர் 16-ஆம் தேதி வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில் ஜேம்ஸ் கேமரூன் டைரக்டில் வெளியாகி உலகளவில் வசூல் சாதனை படைத்த “அவதார்-தி வே ஆஃப் வாட்டர்” ஜூன் 7-ஆம் தேதி டிஸ்னி +ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.