மத்தியப்பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் பகல் நேரத்தில் வாலிபர் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜ்புத் நகரைச் சேர்ந்த அபிஷேக் என்ற வாலிபரை, கார் ஒன்றில் வந்த கும்பல் திடீரென துப்பாக்கியைக் காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றது.

மேலும் ராஜ்புத் நகர் மற்றும் பார்க் மொஹல்லா பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே நிலவி வந்த முன்விரோதம் காரணமாகவே இந்தக் கடத்தல் சம்பவம் நடந்துள்ளதாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

“>

இந்தக் கடத்தல் சம்பவம் குறித்து காவல்துறைக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்டேஷன் ஹவுஸ் ஆபீசர் சிவபிரதாப் சிங் ராஜாவத் தலைமையிலான போலீஸ் குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு, நகரின் முக்கியப் பகுதிகளில் தடுப்புகளை அமைத்தனர்.

இதனால் கடத்தல்காரர்களின் காரை விடாமல் பின்தொடர்ந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்ற போலீசார், பாபேடி சாலையில் காரை மடக்கிப் பிடித்தனர். கடத்தப்பட்ட வாலிபரை எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்ட போலீசார், இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.