நடிகர், இயக்குனர், சமூக சேவகர் என மக்கள் மனதில் தனி இடம் பிடித்த ராகவா லாரன்ஸ், தனது அரசியல் வருகை குறித்து முதன்முறையாக செய்தியாளர்கள் சந்திப்பில் மிக முக்கியமான, நெகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கமெண்ட்களைத் தான் தொடர்ந்து படித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், சின்ன சின்ன பசங்கள்ல இருந்து வயசானவங்க வரைக்கும் எல்லாரும் அவ்வளோ அன்போடவும் உரிமையோடவும் என்னை அரசியலுக்குக் கூப்பிடுறாங்க என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் இந்த தொடர் அன்பிற்கும் கோரிக்கைக்கும் மதிப்பளிக்கும் வகையில் தான் தற்போது ஒரு மிக முக்கியமான, நல்ல முடிவை எடுத்திருப்பதாக லாரன்ஸ் அதிரடியாக உடைத்துப் பேசியுள்ளார். இந்த முடிவை எப்போது, எப்படி அறிவிப்பார் என்ற ஆவலுக்குப் பதிலளித்த அவர், கூடிய சீக்கிரமே என் ரசிகர்கள் எல்லாரையும் ஒரே இடத்துல கூப்பிட்டு, எங்க அம்மாவை அந்த ஸ்டேஜ்ல உட்கார வச்சு, அந்த நல்ல முடிவை அதிகாரப்பூர்வமா அறிவிக்கப் போறேன் என்று மாஸாகக் கூறியுள்ளார்.
மேலும், நீங்க எல்லாரும் என்ன நினைச்சீங்களோ, அது கூடிய சீக்கிரம் நடக்கப் போகுது என ரசிகர்களுக்கு எமோஷனலான ப்ராமிஸ் ஒன்றையும் கொடுத்துள்ளார். அம்மாவின் முன்னிலையில் லாரன்ஸ் வெளியிடப்போகும் அந்த அதிகாரப்பூர்வ அரசியல் அறிவிப்புக்காக ஒட்டுமொத்த கோலிவுட்டும், அரசியல் வட்டாரமும் இப்போது பெரும் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறது.
