தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு எதிராக சமீபத்தில் அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா விலகினார். இதனை அடுத்து அவர் திமுக கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில் அதிமுக- பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்து வரும் அன்வர் ராஜா சமீபத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் நிச்சயம் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் வாய்ப்பு கிடையாது.
அதற்கு பதிலாக செங்கோட்டையன் அல்லது வேலுமணிக்கு தான் முதல்வர் வாய்ப்பு கிடைக்கலாம். அதாவது பாஜக கூட்டணியில் முதல்வராக யார் இருக்க வேண்டும் என்பதை பாஜகவை முடிவு செய்கிறது.
ஏற்கனவே அமித்ஷா அதிமுகவிலிருந்து ஒருவர் முதல்வர் என கூறியுள்ளார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தான் என எந்த ஒரு இடத்திலும் சொல்லவில்லை. அடுத்த முதல்வர் யார்? என்ற முடிவை அதிமுக தான் எடுக்க வேண்டும் பாஜக கிடையாது என கடுமையாக சாடினார்.
