முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது முதலமைச்சரின் உடல்நிலை குறித்தும், அண்மையில் அவர் அனுபவித்த மருத்துவ சிகிச்சை குறித்து விசாரித்ததாக ஓ.பிஎஸ் கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியல் நிமித்தமாக எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. உடல் நலம் குறித்து மரியாதையோடு சந்தித்து பேசியதாக மட்டுமே விளக்கம் அளித்தார் ” மேலும், அவரை வரவேற்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாசலில் வந்து மரியாதையுடன் வரவேற்றார். இந்தச் சந்திப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு பேச்சுக்களை உருவாக்கி வரும் நிலையில், ஓ.பிஎஸ் தரப்பிலிருந்து தெளிவான மறுப்பு வந்துள்ளது.
