சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தராக இருந்த வேல்ராஜ், இன்று (ஜூலை 31) பணி ஓய்வு பெற இருந்த நிலையில், அவரது மீது எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் நிதி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவுவதாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் அவரை பணியிடைநீக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
இந்த முடிவு, கல்வி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, வேல்ராஜ் மீது பல்வேறு விதமான புகார்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பணிஓய்வு பெறவிருக்கும் நாளில் வந்துள்ள இந்த நடவடிக்கை, அவரது எதிர்கால நலன்கள் மீதும் தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.
