இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியா பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. ஒரு சிறிய விஷயம் கூட சோசியல் மீடியாவில் சீக்கிரமாக வைரலாகி விடுகிறது. இந்நிலையில் ஜெனி என்ற ஒரு பெண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் செருப்பு கடையில் நின்று செல்பி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இதன் பேக்ரவுண்ட்டை யாராவது மாற்ற முடியுமா என பதிவிட்டு இருந்தார்.

இதை பார்த்த நெட்டிஷன் ஒருவர் அந்த பெண்ணுக்கு சிறகுகள் இருப்பது போன்று வீடியோ கிரியேட் பண்ணி வெளியிட்டுள்ளார். அதன் பிறகு மற்றொரு நெட்டிசன் அந்த பெண்மணி விண்வெளியில் நிற்பது போன்று எடிட் செய்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்களை ஜெனி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.