ரயிலில் செல்லப்பிராணிகளை அழைத்து செல்ல ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பிராணிகளை அழைத்துச் செல்ல பயணத் தேதியன்று நேரடியாக டிக்கெட் பெற முடியும். இந்நிலையில், தற்போது ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. யானைகள், குதிரைகள், நாய்கள், பூனைகள் மற்றும் பறவைகளுக்கு இது பொருந்தும்.

ஏசி-1 டயர் கோச்சின் 2 அல்லது 4 பெர்த் பெட்டிகளில் மட்டுமே செல்லப்பிராணிகள் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்ட பின்னரே பயணிகள் தங்கள் செல்லப் பிராணிகளுக்கான டிக்கெட்டுகளை ஆப் அல்லது இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய முடியும்.