கல்விக்கு வயது தடை இல்லை என்பதை உணர்த்தும் விதமாக சமீப காலமாகவே வயதானவர்களும் படிப்பில் அசத்தி வருகின்றார்கள். அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் படித்து வரும் சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. சுஜாதா ஜடார ராணுவத்தில் எட்டு வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெற்று எஸ்பிஐ வங்கியில் அதிகாரியாக சில ஆண்டுகள் பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் ஓய்வு காலத்தில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இவர் இரண்டு வருடங்களாக முயற்சி செய்து நீட் தேர்வில் வெற்றி பெற்றார். இதனால் அவர் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள விநாயக மிஷின் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பை படித்து வருகிறார்.