கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னாம்பாளையம் எம்.ஜி.ஆர் நகரில் மாரியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மாரியம்மாள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த மாரியம்மாளை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே மாரியம்மாள் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சரக்கு வாகன ஓட்டுனரான ஏழுமலை என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.