விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) மாநில ஊடகப்பிரிவு முதன்மைச் செயலாளர் மற்றும் அக்கட்சியின் முக்கிய முகமாக விளங்கிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (EX MLA) பனையூர் பாபு, இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை திமுகவில் இணைத்துக் கொள்கிறார். பனையூர் பாபுவுடன் சேர்த்து விசிகவைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகி இன்று திமுகவில் இணையுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசிக தலைவர் தொல்.திருமாவளவனின் மிக நெருங்கிய ‘வலதுகரமாக’ வலம் வந்த பனையூர் பாபுவின் இந்த அதிரடி முடிவு, விசிக தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய கூட்டணியில் விசிக இணைந்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தே அவர் கட்சியை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது. விசிகவின் முக்கிய தூணாக விளங்கிய பனையூர் பாபு, தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமாவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
