
செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் சங்கம் யார் பக்கம் இருப்பது கேட்டிருக்கிறது ? சக நடிகர்கள் படங்கள் வெளிவிடாமல் தடுத்து, திரையரங்கு கிடைக்க விடாமல் பண்ணும் போதெல்லாம் நடிகர் சங்கம் பேசி இருக்கா ? விஜய்க்கு பிரச்சனை வரும்பொழுது பேசியிருக்கா ? விஜய்யை விட சிறந்த நடிகர் வேணுமா ?
அவருக்கு ஒரு பிரச்சினை வரும் பொழுது ஏதாவது பேசி இருக்கா ? தமிழ்நாட்டில் நடிகர்களுக்கு ஒரு சங்கம் இருக்கிறதா ? கர்நாடகா போல…. ஆந்திரா போல… கேரளா போல…. கேரளாவில் அம்மான்னு ஒரு அமைப்பிருக்கிறது…. அது போல உறுதியாக இருக்கிறதா? வேண்டுமென்றால் பேசும்….. இவ்வளவு நாள் இயங்கியதா ? இல்லையா ? என்றே தெரியவில்லை
ஐயா கலைஞர் பாராட்டு விழா என்று வெளியே தெரிகிறது. நாலு இடத்தில் அழைப்பிதழ் கொடுக்கும்பொழுது… ஓஹோ.. நடிகர் சங்கம் இருக்குது போல… என்று நான் அப்பதான் தெரிந்து கொண்டேன். மகளிர் ஆணையம் மணிப்பூரில் இரண்டு பெண்களை நிறுவனப்படுத்தி வன்புணர்வு செய்து, எரிச்சி கொலை பண்ணும் பொழுது தலையிட்டுதா ? பல்லாயிரம் பேர் மணிப்பூரில் கொலை செய்யும் பொழுதே தலையிட்டதா?
8 வயது பாப்பா ஆசிபா …. பச்சிளம் சிறுமியை வன்கொடுமை செய்து…. ஒரு வாரம் வச்சி கை, கால்களை உடைத்து…. 22 பேர் கொன்னு தூக்கிப்போட்ட போது ஏதாவது பேசியதா ? மகளிருன்னு ஒரு ஆணையம் உயிர்போடு இருக்கிறதா? தமிழ்நாட்டில் எத்தனை வன்புணர்வு கொலைகள் இருக்கு… அதுக்கெல்லாம் போசி இருக்கா ? மன்சூர் அலிகான் விஷயத்தில் ஏன் பேசுதுன்னு தெரியவில்லை என தெரிவித்தார்.