மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அழகு யாழினி என்ற சிறுமி 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி தான் ஒரு ராணுவ அதிகாரியாக வரவேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிற்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அந்த சிறுமி கூறியதாவது, நான் பெண்ணாக பிறந்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். ஏனெனில் நமது நாட்டின் ஜனாதிபதியாக ஒரு பெண் தான் இருக்கிறார். நான் எனது உண்டியலில் சேர்த்து வைத்த சேமிப்பு பணத்தில் இருந்து ஜனாதிபதியாகிய உங்களுக்கு ஒரு புடவை வாங்கியுள்ளேன்.

நீங்கள் பயங்கரவாதிகளை எதிர்த்து போராடவும் மக்களை காப்பாற்றவும் ராணுவத்திற்கு உத்தரவிடுங்கள் என எழுதியுள்ளார். இந்த கடிதம் ஜனாதிபதி அலுவலகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கடிதத்திற்கு பதிலாக குடியரசுத் தலைவர் முர்மு சிறுமி யாழினிக்கு வாழ்த்து செய்தி ஒன்று அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் சிறுமியின் நாட்டுப்பற்றை பெரிதும் பாராட்டியுள்ளார். மேலும் சிறுமியின் உயர்ந்த லட்சியம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உங்களுடைய பிரகாசமான எதிர்காலத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதில் வாழ்த்து அனுப்பியுள்ளார். இந்த கடிதம் மாணவியின் நம்பிக்கையை ஊக்குவித்துள்ளது.