உத்திரபிரதேச மாநிலம் காஷ்யா நகரில் நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம் அமி திரிபாதி நகர் பகுதியில் 5 வயது சிறுவனான அனிக் தனது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தான். அப்போது 5 நாய்கள் திடீரென அவனை சுற்றி வளைத்தது.

இதனால் பயந்து போன சிறுவன் வீட்டினுள்ளே செல்ல முயற்சி செய்த போது ஒரு நாய் துணியை பிடித்து இழுத்தது. பின்னர் மற்ற நோய்களும் சேர்ந்து அவனை 20 மீட்டர் தூரம் வரை சாலையில் இழுத்து சென்று கடித்ததால் சிறுவன் வலியில் அலறினான். அவனது அலறல் சத்தம் அருகில் இருந்தவர்களுக்கு கேட்காததால் யாரும் வெளியே வரவில்லை.

ஆனால் சிசிடிவி திரையில் கண்ட காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் ஒருவர் வீட்டினுள் இருந்து வெளியே ஓடி வந்து நாய்களை விரட்டினார். அதன் பின் அனிக்கை சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற நிலையில் தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் சிறுவனுக்கு 18 ஆழமான கடிகள் ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குழந்தையை நொடி பொழுதில் காப்பாற்றிய பெண்ணின் மனிதாபிமானத்தை நெட்டிசன்கள் அனைவரும் பாராட்டி வரும் நிலையில், தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.