
கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் உள்ள பந்தளம் பகுதியில் அஷ்ரப் – சஜினா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 11 வயதில் ஹன்னா பாத்திமா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அருகிலுள்ள பள்ளிகள் 6 ம் வகுப்பு படித்து வந்த நிலையில், வீட்டில் ஒரு பூனையை செல்லமாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளில் அந்த சிறுமி பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென சிறுமியின் கையில் பூனையின் நகம் பட்டதால் காயம் ஏற்பட்டது.
இதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அங்கு அவருக்கு ரேபிஸ் தடுப்பூசி முதல் தவணை போடப்பட்டபின் வீட்டிற்கு திரும்பினார். அதன் பின் 2 வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டது. பின்னர் வீட்டிலிருந்து சிறுமி திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால், சிறுமியின் பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கபட்டு வந்த நிலையில் உடல்நிலை மோசமானதால் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி திடீரென பரிதாபமாக உயிரிழந்து விட்டார். பூனையின் நகக்கீறலால் ரேபிஸ் பாதிக்கப்பட்டு சிறுமி உயிரிழந்து விட்டார் என்று அப்பகுதியில் செய்தி பரவியது. ஆனால் மருத்துவமனை அதிகாரிகள் பூனையை நகக்கிறல் காரணமாக உயிரிழக்க வாய்ப்பில்லை. டெங்கு போன்ற பாதிப்புகளினால் சிறுமி உயிரிழந்திருக்கலாம் என்று கூறினார்கள். மேலும் இது தொடர்பாக சிறுமியின் உடலில் உள்ள மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் முடிவு வெளியானதும் சிறுமி யின் உயிரிழப்பிற்கு காரணம் என்ன என்பது தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர்.