திருவள்ளூர் மாவட்ட வட்டாட்சியர் அலுவலகம் அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 1991-ஆம் ஆண்டு அரசுக்கு சொந்தமான இடத்தில் ஓய்வூதியர் சங்கம் சார்பில் கட்டிடம் கட்டப்பட்டது. அதன் அருகே இருக்கும் 51 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து சைக்கிள் ஸ்டாண்ட் நடத்த குத்தகைக்கு விட்டதாக தெரிகிறது. சுமார் 32 வருடமாக அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் அப்படியே இருந்தது.

இந்நிலையில் வட்டாட்சியர் சுரேஷ்குமார், நகராட்சி ஆணையர் கோ.வி. சுரேந்திரஷா, நகர அமைப்பாளர் குணசேகரன் ஜேசிபி எந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட தடுப்புகளை இடித்து அகற்றி 51 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இடத்தில் நகராட்சி சார்பில் மேல்நிலைப்பள்ளி கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.