இந்தோனேசியாவைச் சேர்ந்த 24 வயது இளம் பெண்ணான ரெனெடா ஃபதிலா, தற்செயலாகத் தனது 64 வயது கணவரின் பழைய புகைப்பட ஆல்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அதில் உள்ள ஒரு புகைப்படத்தை உன்னிப்பாகக் கவனித்தபோது, அவர் பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளானார். காரணம், அந்தப் புகைப்படம் அவரது தற்போதைய கணவரின் இரண்டாவது திருமணத்தின் போது எடுக்கப்பட்டதாகும்.

ஆச்சரியம் என்னவென்றால், அந்தப் புகைப்படத்தில் 9 வயதே நிரம்பிய ரெனெடா, அவரது கணவரின் முதல் திருமணத்திற்குச் சென்று அங்கு ஒரு உறவினராகப் புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறார். இந்தத் தகவல் இணையத்தில் வெளியாகி, ‘வினோத காதல்’ என்ற பெயரில் வைரலாகப் பரவி வருகிறது.

சமூக வலைதளங்களில் இந்த வினோத சம்பவம் பற்றிப் பரவலாகப் பேசப்படும் நிலையில், ரெனெடா இதுகுறித்து விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். “நாங்கள் தற்போது திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம் என்பது உண்மைதான். ஆனால், 9 வயதில் நான் அவரது திருமணத்திற்குச் சென்ற புகைப்படத்தைப் பார்த்ததும் எனக்குத் திடுக்கிடும் உணர்வு ஏற்பட்டது.

இணையத்தில் இதைப் பற்றிப் பலவிதமான கருத்துகள் வந்தாலும், அவரது முந்தைய திருமணம் முறிந்ததற்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார். தற்செயலான இந்தச் சந்திப்பும், பின்னர் மலர்ந்த காதலும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு வித்தியாசமான அத்தியாயத்தை உருவாக்கியுள்ளன.