தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களுக்கான டெபாசிட் தொகை குறித்து மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் புதிய அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இனிவரும் காலங்களில் மதுபாட்டில்களுக்கு டெபாசிட் தொகையாக வெறும் 10 ரூபாய் மட்டுமே வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், குடித்த முடித்த பிறகு காலி மதுபாட்டில்களை கடைகளில் திரும்பக் கொடுக்கும்போது, அந்த 10 ரூபாயை வாடிக்கையாளர்களிடம் உடனடியாகத் திரும்பக் கொடுத்துவிட வேண்டும் என்றும், மதுபாட்டில்களுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் கூடுதல் பணம் வசூலிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய நடைமுறையைத் தவறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளதால், டாஸ்மாக் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
