தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கவுள்ள புதிய அமைப்பு குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஆர்எஸ்எஸ் இயக்கம் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழிநடத்தி வருவதாகவும், தற்போது அண்ணாமலை தொடங்கப்போகும் அமைப்பு வெறும் 2501-வது அமைப்பு மட்டுமே என்றும் அவர் சாடியுள்ளார்.

​பாஜக என்ற கட்சி தமிழ்நாட்டு மக்களிடம் எந்த வகையிலும் எடுபடவில்லை என்றும், அதனால்தான் மோடி – அமித்ஷா ஆகியோரின் ஆசியோடு, பெயரையும் முகத்தையும் மாற்றி அண்ணாமலை புதிய அரசியல் வியாபாரத்தை வெற்றிகரமாக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அண்ணாமலை போடுவது வெறும் ‘மாரீச மான் வேடம்’ என்பதைத் தமிழ்நாடு மக்கள் நன்கு அறிவார்கள் என்றும், இந்த ஏமாற்று வேலை இங்கு செல்லுபடியாகாது என்றும் பெ.சண்முகம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.