செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி,  1999-இல் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி சேர்ந்தாங்களா ..?  இல்லையா ? அதை ஏன் நிறைய பேர் கேக்க மாட்டேங்குறீங்க. ஏன் பத்திரிகைகாரங்க கேட்க மாட்டேங்குறீங்க…

அன்றைக்கு இதே திமுக தான் பாரதிய ஜனதாவோடு கூட்டணி சேர்ந்து…  தொடர்ந்து அமைச்சரவையில் இடம் பெற்றாங்க. இப்போ அப்படியே பல்டி அடிக்கிறாங்க. அடுத்து காங்கிரஸோட போய் சேர்ந்துக்கிட்டாங்க,  கொள்கையாது  ? கோட்பாடாவது…. ஒன்னும் கிடையாத கட்சி,  திமுக கட்சி.

 பாரதிய ஜனதாவுடனும்  போய் சேர்ந்து சேர்ந்துக்குறாங்க, பதவி  வேணும்னா என்ன வேணாலும் செய்வாங்க… அதிகாரமும் – பதவியும் இல்லாத திமுககாரனுக்கு தூக்கம் வராது. திமுக முதல்  மந்திரிக்கும்  தூக்கம் வராது… திராவிட முன்னேற்ற கழகம் குடும்ப கட்சி..

 குடும்பத்தில் இருந்து .அதிகாரத்திற்கு வர வேண்டுமென்று ஆசைப்படுகின்றவர்கள்.  திரு .கருணாநிதி குடும்பம் ஆட்சிக்கு வருவதற்கு எதை வேண்டுமானாலும் செய்வாங்க, அவர்களுக்கு கொள்கையும் –  கோட்பாடு கிடையாது. மக்களை பற்றிய கவலைப்படல, வீட்டு மக்களைப் பற்றி கவலைப்படுகின்ற ஒரே கட்சி திமுக கட்சி என விமர்சித்தார்.