பொதுவாகவே மக்களின் உரிமைகளை மற்றும் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் கட்டளை இடுவது சர்வாதிகாரமாகும். அதன்படி ஆட்சியாளர் வகுக்கும் விதிகளை சிறிதும் சிந்திக்காமல் மக்கள் பின்பற்ற வேண்டிய ஒரு சர்வாதிகார நாடாக வடகொரியா திகழ்கின்றது. இந்த 21ம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஒரு சர்வாதிகார ஆட்சியாளர் வடகொரிய அதிபர் ஆவார். அவர் தன்னுடைய நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டிய ஃபேஷன் விஷயங்களிலும் தலையிடுகிறார். அவருடைய விதிகளை அந் நாட்டு மக்கள் பின்பற்றவில்லை என்றாலும் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.

அதன்படி அந்நாட்டில் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் பல மேக்கப் பொருட்களுக்கு தடை விதிக்க பட்டத்துடன் வடகொரியாவில் இறக்குமதி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான பெண்களால் மிகவும் விரும்பப்படும் ரெட் கலர் லிப்ஸ்டிக்கை பயன்படுத்த வட கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரியா அதிபர் சிவப்பு நிறத்தை முதலாளித்துவம் மற்றும் தனித்துவத்துடன் தொடர்புடையதாக கருதுவதால் இந்த தடையை விரித்துள்ளார். சிவப்பு நிறம் தன்னைவிட பெரியவர் இல்லை என்ற உணர்வை குறிப்பதாகவும் நம்புகின்றார். இதனால் கிம் ஜாங் உன் தனது நாட்டில் வசிக்கும் எந்த நபரும் ஆட்சியாளரை விட அதாவது தன்னைவிட பெரியவராக இருக்கக் கூடாது என்பதற்காக ரெட் கலர் லிப்ஸ்டிக்கு தடை விதித்துள்ளார்.