இந்த உலகில் நீர் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் ஆதாரமாக உள்ளது. உயிரினங்களுக்கு அத்தியாவசிய தேவையாக நீர் உள்ளதால் பூமியின் நிலை மோசமாகி விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மனிதர்கள் நிலத்தடி நீரை அதிக அளவில் வெளியேற்றி உள்ளனர் என சிடெக் டெய்லி தெரிவித்துள்ளது. இதனால் பூமி இரண்டு தசாப்தங்களுக்கும் குறைவான காலத்தில் கிழக்கு நோக்கி சுமார் 80 சென்டிமீட்டர் நகர்ந்து உள்ளதாக கூறப்பட்டது.

பூமி மற்றும் விண்வெளி தாக்கங்களை கண்டறியும் ஒரு அறிவியல் ஆராய்ச்சியும் உள்ளது. இது ஜியோபிசிகள் ரிசர்ச் லெட்டர் AGU-ன் ஜர்னல் ஆகும். விஞ்ஞானிகள் மதிப்பீட்டின்படி பூமி 1993 மற்றும் 2010 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மனிதர்கள் 2150 ஜிகா டன் நிலத்தடி நீரை வெளியேற்றி உள்ளதாக காலநிலை மாதிரிகள் அடிப்படையில் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை சியோல் நேஷனல் யூனிவர்சிட்டியின் புவி இயற்பியலாளர் வென் சியோ, நிலத்தடி நீர் குறைவது பூமியின் சுழற்சி துருவங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். அதேசமயம் இந்த பூமி நகர்வால் பல அனர்த்தங்கள் வரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.